பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை காட்டும் பண்புகள் 123

வேதியர் பிறந்த குலத்தைக் கேளுங்கள்: நான்முக னிடத்திலே பிறந்த வேதங்களை அறிந்த முதல்வர்களாக விளங்கும் வசிட்டரும் அகத்தியரும் யாவர்? தேவதாசியாகிய திலோத்தைமையின் பிள்ளைகள் பூணுரலை அணிந்த வேதியர் களே! இது பொய்யா?” என்று புகன்றான்.

ஆபுத் திரன் பின்பு அமர்நகை செய்து மாமறை மாக்கள் வருங்குலம் கேண்மோ? முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய கடவுட் கணிகை காதலம் சிறுவர் அருமறை முதல்வர் அந்தணர் இருவரும் புரிநூல் மார்பீர் பொய்யுரை ஆமோ?

(ஆபுத்திரன் திறமறிவித்த காதை 92-97)

இவ்வடிகள் பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை: ஒழுக்கமே உயர்குலம் என்னும் உண்மையை உணர்த்தி நிற்கின்றன.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்

(குறள். 972)

என்னும் திருக்குறள் கருத்தினை மணிமேகலை அரண் செய் கின்றது.

மதுவொழிப்பு அடுத்து மணிமேகலையிற் பேசப் பெறுகின்றது. கலம் கடலில் உடைந்துபோக நீந்தித் தப்பி நாகர்மலையை அடைந்த சாதுவன் என்னும் சான்முேன், கள்ளடு குழிசியும் கழிமுடை நாற்றமுங் கொண்டு. பெண்டி ரோடு இருந்த குருமகனைக் கண்டு, மயக்கந்தரும் கள்ளேயும் , மன்னுயிர் நீக்கும் கொலையையும் தவிர்த்தவரே மக்கள் எனக்

குறித்தற்குரியர் என்று குறிப்பிட்டுத் திருத்தின்ை. ==