பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலர் காட்டும் வாழ்க்கை 7

என்பர்.’ பண்டைத் தமிழ்ப் புலவரோவெனில் இயற்கையின் இனிய சூழலில்-பின்னணியில் மனித வாழ்வினைச் சித்திரித்துக் காட்டினர். முதற்பொருள் நிலமும் பொழுதுமாய் அமைய, கருப்பொருள்கள் மக்களும், இயற்கை- செயற்கைப் பொருள் களாய் அமைய, குறிப்பிட்ட வாழ்வுமுறை உரிப்பொருளாய்த் துலங்கக் காணலாம்,

மங்கையரும் மலரும்

மலர்மாட்டுப் பெரிதும் காதல் கொள்வர் மங்கையர். ‘தலைவாரிப் பூச்சூட்டிக் கொள்வதில் தனி விருப்பங்காட்டுவர்; பின்னி முடித்துப் பிச்சிப்பூ சூடிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவர். அழகுள்ள மலர் கொண்டு வந்து குழலில் சூடி இன்புறுதலில் ஆசை கொள்வர். இத்தகு இளம் மகளிர் வேங்கை மரத்தினிடம் சென்று புலி, புலி’ எனக் குரல் எழுப்புவர். அவ்வாறு கூச்சலிடின் வேங்கை மரம் கிளைகளைத் தாழ்த்திப் பூக்களைக் கொடுக்கும் என்று சங்ககால மகளிர் நம்பினர். மேலும், வேங்கை மலரும் பருவமே திருமணத்திற் குரிய காலம் என்றும், வேங்கை மலர்கள் விழுந்து கிடக்கும் முன்றிலே திருமணம் நிகழிடம் என்றும் கலித்தொகை குறிப் பிடுகின்றது:

வருமே தோழி நன்மலை நாடன் வேங்கை விரிவிட நோக்கி வீங்கிறைப் பனைத்தோள் வரைந்தனன் கொளற்கே?

11. “There are two great subjects of Poetry; the natural world and the human nature. It is a terrible business for poetry when it is wholly employed on men wholly employed on nature.”

—Stopford Brooke.

12. கலித்தொகை, குறிஞ்சி, 2 : 25-26