பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மலர் காட்டும் வாழ்க்கை

மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்

(ஆதிரை பிச்சையிட்ட காதை 84-85)

சிறையொழிப்புச் சீர்திருத்தமும் மணிமேகலை காட்டும் அறநீதியாகும். தன் மகன் உதயகுமரன் இறப்புக் கண்டு பேதுற்ற பெரு நெஞ்சினளாம் இராசமாதேவி, மணிமேகலைக்கு மயக்க மருந்து தந்து பித்தேறச் செய்து, அவளைக் கீழ் மகனெருவளுல் கெடுக்க நினைக்கிருள். ஆல்ை மணிமேகலை யின் தவம் அவளை அவ் அவத்திலிருந்து காப்பாற்றுகின்றது. இராசமாதேவியை அணுகி அவளுக்கு அறவுரை பகருகின்றாள்:

“அம்மா, இராசமாதேவியே! உயிர் துறந்துபோன உதயகுமரன் உடலுக்காகக் கலங்கி நீ அழுகின்றாயா? அல்லது அவன் உயிருக்காக அழுகின்றாயா? உடலுக்காக என அழுவாயேயாயின் அவன் உடலை நீயே உன்னிடத்து வைத்துக் கொள்ளாமல் சுடுகாட்டுக்கு எடுத்துக்கொண்டு சென்று சுடச் சொன்னது யார்? உயிர்க்காக அழுவாயேயானல் தோன்றிய அந்த உயிர் அழிந்து விடவில்லை. வேருேர் உடலில் அது இப்பொழுது புகுந்து உலவுகின்றது. எனவே இவ்வுகில் நீ காணும் உயிர்களுக்கெல்லாம் அன்பு செலுத்துவாயேயானல் அவ்வுயிர்களுள் ஒன்று உன் ஆருயிர் மகன் உதயகுமரனின் உயிராக இருக்கலாம் அல்லவா?’ என்றாள்.

உடற்கழு தனையோ உயிர்க்கழு தனையோ உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்

(சிறைவிடு காதை 73-79)