பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i26 மலர் காட்டும் வாழ்க்கை

பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின் நல்லறஞ் செய்வோர் நல்லுலகு அடைதலும் அல்லறஞ் செய்வோர் அருநரகு அடைதலும்

(ஆதிரை பிச்சையிட்ட காதை 86-89)

மணிமேகலை நவிலும் நற்கருத்தாகும்.

யாக்கை நிலையாமை போன்றே இளமையும் நிலையாது என்பது மணிமேகலை உணர்த்தும் மற்றாேர் அரிய பாடமாகும். அழியக்கூடிய அழகை மணிமேகலை மனங்கொளும்படி வற்புறுத்தியிருக்கும் பாங்கு உன்னி உணரத்தக்கது;

  • கருமணல் போன்ற கூந்தல், வெண்மணல் போல் வெளுக்கும் காலம் வந்துற்றது: பிறைபோலும் நெற்றி, வெளுத்துச் சுருங்கும் தன்மை வந்தடைந்தது. வெற்றி நல்கும் வில்போல் விளங்கும் புருவம், இருல் மீனின் வற்றலைப் போல் வற்றி அழகிழந்தது: செங்கழுநீர்ப் பூப்போன்ற கண்கள், இப்போது நீர் நிறைந்து கண்ணிரை வடிக்கின்றது. குமிழம் பூப்போன்ற மூக்கு, தானே ஒழுகும் சீழ்போன்ற சளி நிறைந்து விளங்குகிறது. நிரல்பட முத்துப்போல் ஒளியுமிழ்ந்த பற்கள், இப்போது சுரைவிதையைப் போல் மாறி அழகையிழந்தன. இலவம் இதழ்போல் சிவந்திருந்த வாய் இப்பொழுது நாறிப் போன புண்ணைப்போல் புலால் நாற்றம் வீசி நிற்கின்றது. வள்ளைக்கொடி போன்ற காதுகள், காய்ந்து வற்றிய மாமிசத் துண்டுகள் போலக் காட்சி தருகின்றன. கொள்ளை அழகு குலவிய தனங்கள் இன்று உள்ளீடு இல்லாத வெறும் பைகள் போல நீண்டு தொங்குகின்றன. அழகிய இளைய மூங்கில் குருத்தைப் போன்று குளிர்ச்சியும் வழவழப்பும் திரட்சியும் கொண்டிருந்த தோள்கள், இப்பொழுது ஒசிந்து தாழ்ந்து தொங்குகின்ற தென்னை மட்டைபோலச் சுருங்கி அழகிழந் துள்ளன. விரல்கள், வற்றிச் சுருங்கிப் போய் வனப்பிழந்து