பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை காட்டும் பண்புகள் i27 விட்டன. வாழைத் தண்டைப்போற் செழித்து வனப்புடன் விளங்கிய துடைகள் இரண்டும் இப்போது வற்றிக் காய்ந்த தாழைத் தண்டைப் போல மாறிவிட்டன. அம்புப் புட்டில் என்று ஒரு காலத்தில் நயமுடன் வருணிக்கப்பட்ட கணக்கால் கள் இன்று நரம்புகளை வெளியே காட்டிக் கொண்டிருக்கின் றன. தளிர் போலத் துலங்கிய பாதங்கள் முற்றி முதிர்ந்து தானே உதிர்கின்ற நெற்றுத் தேங்காய்களைப்போல வற்றி விட்டன. இத்தகைய உடம்பைத்தான் முன்பு பூவாலும், நறுமணப் பொருளாலும் நாற்றம் வீசாமல் மறைத்தனர். ஆடைகளும் அணிகளும் கொண்டு காண்போர் மனத்தைக் கவரும் வகையில் முன்னையோர் அழகு செய்து கொண்டனர். இந்த வஞ்ச நிகழ்ச்சியை நீ அறிவாயாக’ என்று மணிமேகலை தன்னை விரும்பிய உதயகுமரனுக்கு, ஒரு நரை மூதாட்டியைக் காட்டித் தோன்றி மறையும் அழகின் திறத்தினைத் தெளிவுறுத் திள்ை:

உதைய குமரன் தன்பாற் சென்று நரைமூ தாட்டி ஒருத்தியைக் காட்டித் தண்ணறல் வண்ணம் திரிந்துவே ருகி வெண்மண லாகிய கூந்தல் காணுய் பிறை நுதல் வண்ணம் காணுயோ நீ நரைமையில் திரைதோல் தகையின் ருயது விறல்விற் புருவம் இவையும் காணுய் இறவின் உணங்கல் போன்று வேருயின கழுநீர்க் கண்காண் வழுநீர் சுமந்தன குமிழ்மூக் கிவைகாண் உமிழ்சி யொழுக்குவ கிரைமுத் தனைய நகையும் காணுய் கரைவித் தேய்ப்பப் பிறழ்ந்துவே ருயின