பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i28 மலர் காட்டும் வாழ்க்கை

இலவிதழ்ச் செவ்வாய் காணு யோே புலவுப் புண்போற் புலால்புறத் திடுவது வள்ளைத் தாள்போல் வடிகா திவைகாண் உள்ளுன் வாடிய உணங்கல் போன்றன இறும்பூது சான்ற முலையும் காணுய் வெறும்பை போல வீழ்ந்துவே ருயின தாழ்ந்தொசி தெங்கின் மடல்போல் திரங்கி வீழ்ந்தன. இளவேய்த் தோளும் காணுய் நரம்பொடு விடுதோ லுகிர்த்தொடர் கழன்று திரங்கிய விரல்க ளிவையுங் காணுய் வாழைத் தண்டே போன்ற குறங்கிணை தாழைத் தண்டின் உணங்கல் காணுய் ஆவக் கணைக்கால் காணு யோே மேவிய நரம்போ டென்புபுறங் காட்டுவ தளிரடி வண்ணம் காணு யோே முளிமுதிர் தெங்கின் முதிர்கா யுணங்கல் பூவினும் சாந்தினும் புலால்மறைத்து யாத்து தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த வஞ்சம் தெரியாய் மன்னவன் மகனென விஞ்சை மகளாய் மெல்லியல் உரைத்தலும்

(உதயகுமரனை வாளாலெறிந்த காதை : 39-70)

மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனர், இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் ஒருநாள் மடிதல் உறுதி என்பதனை மிகவும் நயம்படக் கிளத்தியுள்ளார்.

தவத்துறை நிற்கும் தவச்சிரேட்டர்கள், பெருஞ் செல்வர் கள், கருவுயிர்த்த பெண்கள், தாமே நடப்பதற்கு வலுவற்ற இளஞ்சிறுவர்கள் ஆகிய அனைவரும் மடிந்து போனதைக்