பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை காட்டும் பண்புகள் 129

காண்கிருேம். கொடுந்தொழில் கொண்ட எமன், முதியவர், இளையவர் என்று பார்ப்பதில்லை. எல்லோரையும் காலம் முடிந்தபின் கொன்று குவிப்பான். இவ்வாறு எமய்ை உயிர் குடிக்கப்பட்டு முடிந்துபோன வெற்றுடம்புகளை, நெருப்பாகிய வாயையுடைய இச் சுடுகாடு தின்று மகிழ்வதை எவரும் கண் கூடாகக் காண்கின்றனர். இவ்வாறு கண்டும், மிகப் பெருஞ் செல்வமாகக் கள்ளைக் கருதிக் குடித்து விளையாடுகின்றனர். மிகச்சிறந்த நல்லறங்களை ஆற்றத் தலைப்படாமல் நிற்கின் றனர். இத்தகு தன்மை வாய்ந்த மக்களைக் காட்டிலும் மடமை வாய்ந்தோர் எவரேனும் உண்டோ?’ என்று விஞ. வெழுப்பி, எல்லோர்க்கும் இறப்பு உறுதி; இறப்பிலிருந்து விலக்குப் பெற்றவர் எவரும் இல்லை என்று தமக்கே உரிய முறையில் அறச்சான்றாேராம் சீத்தலைச்சாத்தனர் செப்பமுறப் புலப்படுத்துகின்றார் :

தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோர் என்ன்ை இளையோர் என்னுன் கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பவிவ் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் கழிப்பெருஞ் கெல்வக் கள்ளாட் டயர்ந்து மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்களின் சிறந்த மடவோர் உண்டோ:

(மணிமேகலை : சக்கரவாளக்கோட்ட முரைத்த காதை : 97.104)

எனவே இவ்வுலகில் ஒழுக்கமே உயர்வு தரும், அறமே விழுத்துணையாக நிற்றாம் என்பதனைப் பின்வரும் பகுதி கொண்டு மேலும் தண்டமிழ்ச் சாத்தனர் தெளிவுறுத்து கின்றார்.

LD,-9