பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. மகளிரும் விருந்தும்

தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ப்பவர்கள் பெண்கள்: வாழையடி வாழையாகத் தமிழ்ப் பெண்டிரின் பண்புகள் இலக்கியங்களின்வழி படிக்கப் பெறும் பொழுது மாண்பு நிறைந்தனவாகவே காணப்படுகின்றன. பெண்ணின் பெரும் பண்புகள் ஒரு குடும்ப முன்னேற்றத்திற்கு அரணுக இருந்து அக் குடும்பத்தை வாழ்விக்கக் காண்கிருேம். திருவள்ளுவரும்,

இல்லதென் இல்லவள் மாண்பால்ை உள்ளதென்

இல்லவள் மானக் கடை

(குறள் : 5)

என்று இல்லாளின் இனிய சிறப்பினை எடுத்து மொழிந்திருக்கக் காணலாம்.

பிறந்த வீட்டிற்குப் பெருமை சேர்க்கும் நிலையில் புகுந்த வீட்டில் அவர்கள் வாழ்வு துலங்குதல் வேண்டும். தலைவன் நல்ல செல்வம் பெற்று மகிழ்ந்து வாழ்வதற்குத் தலைவி காரணமாக அமைகிருள் :

யாய் ஆகியளே விழவுமுத லாட்டி .

(குறுந்தொகை : 10-1) மேலும் தலைவி யொருத்தி புகுந்த வீட்டிற்கு வருமுன்னர், அவ் வீடு ஒரே ஒரு பசுவைக் கொண்டு, அப் பசுவால் வரும் வருவாயைக் கொண்டு வாழும் எளிய செல்வ நிலையினையுடைய தாக இருந்தது. ஆல்ை இப்போதோ எனில் நாள்தோறும் திருவிழா நடைபெறும் ஊரினைப்போல அப் பெண் புகுந்த

மனே பூத்துப் பொலிகின்றது என்று துரங்கலோரி என்னும் புலவர் குறிப்பிடுகின்றார் :