பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மலர் காட்டும் வாழ்க்கை

உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே; இஃதோ ஒர்ஆன் வல்சிச் சீரில் வாழ்க்கை பெருங்லக் குறுமகள் வந்தென இனிவிழ வாயிற்று எண்ணுமிவ் வூரே.

(குறுந்தொகை : 295)

விருந்து போற்றுதல் மகளிர் கடமைகளில் தலையாய ஒன்றாக இருந்தது. தொல்காப்பியனர் தலைமகளின் பண்புகளைக் குறிப்பிட வந்தவிடத்து,

விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோன் மாண்புகள்

(தொல். கற்பியல், 11) என்று விருந்து போற்றும் விழுப்பப் பண்பினைப் போற்றி யிருக்கக காணலாம்.

திருவள்ளுவர் விருந்தோம்புதல்’ என்றாேர் அதிகாரத் தினை அறத்துப் பாலில் அமைத்திருக்கும் திறம், பண்டைத் தமிழர்தம் வாழ்வில் விருந்தோம்புதல் பெற்றிருந்த இடத்தினை எடுத்துக்காட்டும்.

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு

(குறள் : 86)

என்ற குறள் விருந்தோம்பற் சிறப்பினை நன்கு எடுத்துக் காட்டும்.

சிலப்பதிகாரத்தில் விருந்து போற்றும் நிலை, பெருமை யுடைய வாழ்வாகக் குறிக்கப்பெற்றுள்ளது.

மறப்பருங் கேண்மையொடு அறப்பரி சாரமும்

விருந்துபுறந் தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்

(சிலம்பு : 1.1 : 85.86)