பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகளிரும் விருந்தும் 133

வறுமையுற்ற எளிய காலத்திலும்கூட விருந்து போற்றும் பண்பினைப் பாணர் குடும்பம் ஒன்று மறந்துவிட வில்லை என்பதனைச் சிறுபாணுற்றுப்படை கொண்டு அறியலாம்.

“பாணன் மனைவி பசியால் வருந்துகின்றவள்; மெல்லிய இடை வாய்ந்தவள்; வளையணிந்த கையினள்; கிணைவாசிப் போனின் இல்லக்கிழத்தி அவள்.

அறுசுவை உணவு சமைப்பதற்குரிய பண்டம் ஒன்றும் வீட்டில் இல்லை. மனைத் தோட்டத்தே விளைந்துள்ள குப்பைக் கீரையினைத் தன் கூர்மை படைத்த நகத்தால் கிள்ளிள்ை. கீரைக்குப் போட உப்புக்கூட இல்லை. எனவே உப்பின்றி வேக வைத்தாள். செல்வம் வருவதும் போவதும் உலகியற்கை என்று எண்ணும் தெளிந்த அறிவு இல்லாதவர் கள் இந் நிலையினைப் பார்த்தால் நகைப்பார்களே என்று நாணங் கொண்டாள். ஆதலால் தெருவாயிற் கதவைச் சாத்தித் தாளிட்டாள். தனது நிறைந்த சுற்றத்தினரை வரவழைத்து வீட்டினுள்ளே அழைத்துச் சென்று உட்கார வைத்து, அவர்களுடன் தானும் ஒன்றாகத் தான் சமைத்த கீரையுணவை உண்டாள்.’

ஒல்குபசி யுழந்த ஒடுங்குநுண் மருங்குல் வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த குப்பை வேளை உப்பிலி வெந்ததை மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து இரும்பே ரொக்கலொடு ஒருங்குடன் மிசையும்

(சிறுபாணுற்றுப் படை : 1.35-139)

இப் பகுதி கொண்டு வறிய நிலை வந்துற்ற நிலையிலும் விருந்து போற்ற மறக்காத பழந்தமிழ்ப் பெண்டிரின் பண்பு நலத்தினைப் பரக்கக் காண்கிருேம்.

அமிழ்தத்தைக் தன் சுவையால் வென்ற உணவு; சுவைக்கச் சுவைக்கத் தெவிட்டாத மணம் கமழும் இனிய அட்டில்: நல்ல தாளிப்பு மணம் கொண்டது. இத்தகைய உணவை வந்த விருந்தினர்க்கு வரையாது குறைவில்லாமல் வழங்கி