பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மலர் காட்டும் வாழ்க்கை

புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில் கனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றே.18

திருமணத்தில் மலர்கள் ■

சிலப்பதிகாரம் கானல்வரியில் யாழினைக் குறிப்பிட வரும் இளங்கோவடிகள் அது மணமகள்போல் மலர் சூடிக் காணப் பட்டது என்கின்றார்,

“பண்டைத் தமிழ்க்கன்னி மலர் சூடாள் என்பதும், மலர் குடின் கன்னியாகாள், ஒருவனை வரித்தாள் என்பதும் நம் ப9ஞ் சமுதாய வழக்கு என்று கூறிச் சில இலக்கியச் சான்று கள் காட்டி நிறுவுவர் பண்டாரகர் வ. சுப. மாணிக்கம் அவர்கள்.14

பண்டைத் திருமண நிகழ்ச்சியினைக் குறிப்பிடும் விற்றுாற்று மூதெயினர்ை பாடிய அகநானூற்றுப் பாடலில், ஆம்பற்பூவின் முறிக்கப்பட்ட இதழ்களால் ஆகிய பருத்த நிறம்பொருந்திய மாலையை நீக்கி, வண்டுகள் ஒலிக்கும் ஆராய்ந்த மலர்களை ச் குடிய வதுவை மண்ணிய மணமகள் குறிக்கப் பெறுகின்றாள்.

பரூஉப் பகை ஆம்பல் குரூஉத்தொடை நீவிச்

சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த

இரும்பல் கூந்தல்.”

மேலும் மணமக்களை வாழ்த்தும் பெருமக்கள்,

நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்கே

13. கலித்தொகை, குறிஞ்சி, 13 : 33-34. 14. தமிழ்க் காதல், பக்கம் 159. 15. அகநானூறு, 136 : 27-29. 16. அகநானூறு, 86 : 15-16,