பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகளிரும் விருந்தும் 135

நன்மனை நனிவிருந் தயரும் கைது வின்மையின் எய்தா மாறே

(நற்றிணை : 280 : 9-10)

சங்க கால மகள் விருந்தினர் ஓயாது வந்துகொண்டிருந் தாலும் மனங்கோணமாட்டாள். உணவு சமைக்க உதவும் பண்டங்கள் குறைவாயிருந்தாலும் கவலைப்பட மாட்டாள். வந்த விருந்தினர் அனைவரையும் பந்தலிலே வரிசையாக உட்கார வைத்து முறையாக உணவு பரிமாறி உபசரிப்பாள்:

தவச்சிறி தாயினும் மிகப்பலர் என்னுள் நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும் இற்பொலி மகடூஉ.

(புறநானூறு : 331 : 7-9) கொடிச்சியர் குலப்பெண்களிடம் பகுத்துண்டு விருந்து போற்றும் பண்பு விளக்க முற்றிருந்தது. மலைச்சாரலில் கானவனல் அம்பெய்து கொல்லப்பெற்ற முள்ளம் பன்றியின் கொழுவிய இறைச்சியினை அவன் மனைவி மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்து, அவ் இறைச்சியைச் சிற்றுாரிலே உள்ள பலருக்கும் பகுத்துக் கொடுத்து நிற்கிருள்.

கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை தேங்கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு காந்தளம் சிறுகுடிப் பகுக்கும்.

(நற்றிணை : 85 : 7.9)

சிலப்பதிகாரத்திலும் கதைத் தலைவி கண்ணகி, கோவலன் பிரிந்தபொழுது வந்த விருந்தினரைப் போற்ற முடியாமற் போய்விட்டதே என்று எண்ணி நைந்ததாகக் குறிப்பிட்டுள்ள தனினின்றும் விருந்தோம்புதலின் மாண்பினை உணரலாம் :

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்

துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை.

(சிலம்பு : கொலைக்களக்காதை : 71.73)