பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மலர் காட்டும் வாழ்க்கை

கம்பநாடரும் தம் காப்பியமாம் இராமாயணத்தில் கோசல நாட்டுப் பெண்கள் கல்வியும் செல்வமும் கணக்கின்றி வாய்த்த வர்கள் என்றும், எப்போதும் வருந்தி வந்தவர்க்கு வழங்கி, நாள்தோறும் வந்த விருந்தினருடன் கூடி வகையுடன் உண்ணுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் :

பெருந் தடங்கண் பிறைநுதலார்க் கெல்லாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே

(கம்பராமாயணம் : பாலகாண்டம் : நாட்டுப்படலம், 36)

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கவிஞரான பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும், தாம் இயற்றிய குடும்ப விளக்கு” என்னும் நூலில் ஒரு பகுதியினை விருந்தோம்பல்” என்று தலைப்பிட்டுச் சிறப்பித்திருக்கக் காணலாம்.

எனவே, விருந்தோம்புதல் என்னும் விழுமிய பண்பு தமிழக மகளிர்மாட்டு வழிவழிச் சிறந்து வந்துகொண்டிருக் கின்றது என்பதனை அறிந்துகொள்ளலாம்.