பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலர் காட்டும் வாழ்க்கை 9

மணமக்கள் தலையில் மலர்தூவி வாழ்த்துகிறார்கள். இளங்கோவடிகளும் கோவலன் கண்ணகி திருமணத்தைக் குறிக்கும் பொழுது,

காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல் தீதறுகென வேத்திச் சின் மலர் கொடு தூவி’

என்று மலரிட்டு வாழ்த்தும் நிலையினை மறவாது குறிப்

பிட்டுள்ளார்.

களவுக்காலத்தில் தலைமகளுக்குத்தலைமகன் தரும் கையுறை தழையும், மலருங் கொண்ட கண்ணி என்பதும் நினைவுகூரத் தக்கது. தலைமகன் தரும் கையுறை மறுக்கும் தோழி ஒருத்தி, தன் மலைமுழுதும் குருதிபோல் பூக்கும் காந்தட் பூக்கள் மிகுந்து காணப்படுகின்றன என்று கூறிக் கையுறை மறுக் கின்றாள்.

கழல்தொடி சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.”

புறத்திணையிலும் பூக்கள்

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ எனப் பண்டையாசிரியர் தமிழ்கூறு நல்லுலகத்தினைக் குறிப்பிட்டார். படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டுவருங் குடி யெனச் சேர சோழ பாண்டியர்தம் குடியின் பழமையினைப் பாராட்டுவர் பரிமேலழகர். முடியுடை மூவேந்தர்க்கு அடையாளப் பூமாலையாக விளங்கிய பூக்கள் பனம்பூ, ஆத்திப்பூ, வேப்பம் பூவாகும்.

17. Gabibig. 1 : 61–62. 18. குறுந்தொகை, 1 : 3-4. 19. திருக்குறள், 995 : உரை,