பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மலர் காட்டும் வாழ்க்கை

போங்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்.”

மேலும் அகத்திணைக்கு ஈடான புறத்திணைகளும் மலர்ப் பெயர்களைக் கொண்டே அமைந்துள்ளன. பகைவர் பசுநிரை களைக் கவர வெட்சிப்பூவினை வீரர் சூடிச் சென்றனர்; பசு நிரையினை மீட்கக் கரந்தைப்பூச் சூடி நின்றனர். மாற்றார் மண்ணைக் கவர வஞ்சிப்பூ மலைந்து வீரர் அணிவகுத்துச் சென்றனர்; தம் மண்ணைக் காக்கக் காஞ்சி சூடி நின்றனர். மதிலே வளைக்க உழிஞைப் பூச்சூடியும், மதிலைக் காக்க நொச்சிப் பூச் குடியும் தமிழ் வீரர் நின்றனர். போர்க்களத்தே தும்பைப் பூவைச் சூடினர்; போரில் வெற்றிபெற்றவர் வாகைப் பூ மலைந்தனர்.

போர்க்காலங்களில் மகளிர் பூ அணிந்து பொலியாமல் வருந்தினர்.” கணவனைப் பிரிந்து வாழும் தனிப்படர்மிகுந்த நிலையிலும் பூச்சூடிக் கொள்ளாமல் வாளா விருந்தனர். எனவே, பூவெனப்படுவது மகிழ்ச்சிக் காலங்களில் இன்பத்தை மிகுவிக்கும் மங்கலப் பொருளாயிற்று..ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ் சாத்தன் இறந்தபோது, குடவாயிற் கீரத்தனர் பாடிய கையறுநிலைப் பாடலும் இங்குக் கூறப்பட்ட கருத்தினை விளக்கும்.

இளையோர் சூடார், வளையோர் கொய்யார், நல்லியாக் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான், பாடினி அணியாள், ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?”

20. தொல்காப்பியம் : பொருளதிகாரம் ; புறத்

திணையியல், 3. 4-5 21. பூவில் வறுந்தலை முடிப்ப-புறநானூறு - 44 : 7 22. புறநானூறு- 242.