பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலர் காட்டும் வாழ்க்கை 11

பெருவீரர் சாத்தன் இறந்துபட்ட பிறகு முல்லைப் பூவினை இளைய வீரர் சூடார் : வளையலணிந்த இளைய மகளிர் கொய்யார் : பாணன் தன் நல் யாழ் மருப்பினல் மெல்ல வளைத்துப் பறித்துச் சூடிக்கொள்ளான்; பாடினி அணியாள். இந் நிலையில் முல்லைக்கொடியே, நீ பூத்துக் குலுங்குகின்றாயே: அவ் வள்ளலை யிழந்து இறக்காமல் இன்னும் வாழ்ந்துகொண் டிருக்கும் எம் வாழ்வுபோலவே அவன் வாழ்ந்த ஒல்லையூர் சூழ்ந்த நாட்டில் நீ பூத்துக்குலுங்கும் பூப்பும் கொடுமையே யாகும் என்று பாடும் கையறுநிலைப் பாடல் தமிழர்தம் புறவாழ்விலும் மலர்கள் பெற்ற இடத்தினை உணர்த்தி நிற்கும்.

மேலும் அந்நாளைய அரசர்கள் தம்மைப் பாடிய புலவர் பெருமக்களுக்குப் பரிசுகள் நல்கும்போது, பொன்ற்ை செய்த தாமரைப் பூவினையும், வெள்ளி நாராற் கட்டிய பூங்கொத்தினை யும் வழங்கினர். பாணர்கள் தம் இசைக் கருவிகளுக்கு மலர் சூட்டி, இசைகருவிகளைத் தெய்வமென மதித்தனர்.

மேலும் போர்வீரன் மனைவி, ஆண் குழந்தையை ஈன்றெடுத்ததும் அவள் கணவன் போர்க்குரிய மாலைகளையும் உடைகளையும் (Uniforms) அணிந்து முதற்காட்சி அளிப்பான் என்பதனைப் புறப்பாடல் கொண்டு தெளியலாம். சிறுவர் சிறுமியரும் பூச்சூடிக் கொள்வதனைச் சிறப்பாகக் கருதினர். மங்கையரும் மலரும் சொல்லும் பொருளுமாக அமைந்து நின்றனர்.

மலரும் வாழ்வும்

மலைவாழ்நர் உணவினைப் பலரோடும் பகுத்துண்னும் போது அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த இடம்,மலை மல்லிகை கமழும் அழகிய முற்றமாக அமைந்திருக்கக் காண்கிருேம்.

கூதளங் கவினிய குளவி முன்றில் செழுங்கோள் வாழை அகலிலைப் பகுக்கும்”

23. புறநானூறு, 168 : 12-13.