பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மலர் காட்டும் வாழ்க்கை

முல்லைப்பாட்டில் வினை முடித்துக் தலைமகளை நாடி, வீடு திரும்பும் அரசனின் செலவு சுட்டப்படுகின்றது. அவன் வினை முடித்து மீளும் செந்நிலப் பெருவழியினைக் காட்டும் ஆசிரியர் நப்பூதனர், காட்டுநிலப் பூக்கள் காட்டி நிற்கும் கோலத்தினை அழகுறப் புனைந்துள்ளார் :

செறிந்த இலைகளையுடைய காயாம்பூ மலர்கள் அஞ்சனம்

போன்று மலர்ந்துள்ளன; மெல்லிய கொத்துகளைக் கொண்ட கொன்றைப் பூக்கள் ஒளிவிடும் பொன்போல் பூத்துக் குலுங்குகின்றன; கோடற்பூவின் குவிந்த மொக்குகள் உள்ளங் கைகள் போன்று மலர்ந்துள்ளன. கொத்துக் கொத்தாய்த் தோன்றும் தோன்றி மலர்கள், இரத்தச் சிவப்பாகப் பூத்துள்ளன :

“. செறியிலைக் காயா வஞ்சன மலர

முறியினர்க் கொன்றை நன்பொன் காலக்

கோடற் குவிமுகை யங்கை யவிழத்

தோடார் தோன்றிக் குருதி பூப்ப” கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் காட்சியன்றாே

இது!

முடிவுரை

இவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்களைப் படிப்போர் மலர் கள் தமிழர் வாழ்விற்பெற்ற மதிப்பிற்குரிய மாண்புறு நிலையினை நன்குக் காண்பர். காதலைக் குறிக்க வந்த திருவள்ளுவர் மலரினும் மெல்லிது காமம்’ என்றார். விருந் தினரை ஒம்ப வேண்டிய பான்மையினைக் குறிப்பிடும் பொழுதும், மோப்பக் குழையும் அனிச்சம் என்று மலரையே உவமித்துக் காட்டினர். மகளிர் உறுப்புநலனை வருணிக்கும் கவிஞர்களும், தாமரை போன்ற முகம் என்றும், குவளே மலர் போன்ற கண்கள்’ என்றும், எட் பூ நாசி என்றும்,

24. முல்லைப்பாட்டு, 93-96,