பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o o o

மலர் காட்டும் வாழ்க்கை 13

‘முருக்க மலர் போன்ற இதழ்கள்’ என்றும், குமுத மலர் போன்ற வாய்’ என்றும், வாழைப் பூப் போன்ற கூந்தல்” என்றும், காந்தள் போன்ற கைகள்’ என்றும், நொச்சி மலர் போன்ற அடிகள்’ என்றும் மலர்களுடன் ஒப்பிட்டே மங்கையர் எழிலைப் பாராட்டியிருக்கின்றனர்.

முகை, மொட்டு, போது, மலர், வீ, செம்மல் என்னும்

பல்வேறு பெயர்கள் மலரின் பல்வேறு நிலைகளை உணர்த்து வனவாகும்.

இதுகாறும் கூறப்பெற்ற செய்திகள் கொண்டு, பழந் தமிழர் தம் வாழ்வில்-அகவாழ்வாயினும் சரி, புற வாழ் வாயினும் சரி.-மலர்கள் பெற்றிருந்த இடம் மாணப் பெரிது: மாண்புடையது; போற்றத் தக்கது என அங்கை நெல்லிக்கனி’ யென அறியலாம். மலர்கள் வாழ்க! மலர்கள் காட்டும் நாகரிகம் வாழ்க!