பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அன்பான வாழ்க்கை

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி என்று தமிழ்க்குடியின் பழமை பேசப்படுகின்றது. பழமை வாய்ந்த பழந்தமிழர் வாழ்க்கை, குறிக்கோளும் பண்பாடும் அமைந்த வாழ்க்கையாகும். குறிக்கோளில்லாத வாழ்வு, கடிவாளம் இன்றிக் குதிரையில் அமர்ந்து சவாரி’ செய்தலை ஒக்கும். வயலுக்கு வரப்பும் வேலியும் அமைந்து கிடப்பது போல, வாழ்க்கைக்குக் குறிக்கோளும் பண்பாடும் துணையாக-காவலாக அமையவேண்டும். வழுக்கு நிலத்தில் ஊன்று தடியின்மேல் கால் வழுக்கி விழுதல்போல, குறிக் கோளற்ற வாழ்கையில் துன்பமுற்றுச் சாய்தல் நிகழும்.

பழந்தமிழர் வாழ்க்கைக் கலையில் வல்லவர்கள். நல்ல வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகள் அன்பும் பண்பும், அறவுணர்வும் பொருள் முயற்சியும் எனக் கண்டனர். இவ் வுயரிய பண்புகள் தங்கள் வாழ்க்கையில் இயைந்து நிற்க, அவர்களின் வீட்டு வாழ்வு-இல்வாழ்வு இன்பமும் அமைதியும் கொண்டதாகத் துலங்கியது.

அன்பே இல்வாழ்க்கையின் அடிப்படையாக அமை கின்றது. அன்பு அகத்தில் இல்லாத வாழ்க்கை வற்றிய பாலை நிலத்தில் வற்றல் மரம் தளிர்த்ததைப் போன்றிருக்கும் என்பர் திருவள்ளுவர் :

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று.

(திருக்குறள், ! 78.) தலைவனும் தலைவியும் ஈருடற் புள்ளின் ஒருயிராக அமைந்து இனிய இல்லற வாழ்வில் தலைப்படும்பொழுது ஒருவரை புரிந்து