பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பான் வாழ்க்க்ை 45

கொண்டு ஒருவருக்காக ஒருவர் உளம் நெகிழும் பண்பு இல்வாழ்க்கையின் இனிமைக்கும் சிறப்பிற்கும் அடிப்படையா கின்றது. தலைவர் மாருத சொல்லையுடையவர்: நீண்ட காலம் நிலைக்கத்தக்க இனிய பண்புகள் வாய்ந்தவர்: எக்காலத் திலும் என் தோள்களைப் பிரியமாட்டார்’ என்று தலைவி ஒருத்தி, தலைவன் ஒருவன் தன் மாட்டுக்கொண்ட காதற் சிறப்பினைக் கவினுற எடுத்துரைக்கின்றாள்:

கின்ற சொல்லர் நீடுதோன் றினியர் என்றும் என்தோள் பிரிபறி யலரே.

(நற்றிணை, 1 : 1-2)

தலைவனும், தலைவிபோன்றே, தலைவிமாட்டு நிறைந்த காதல் நெஞ்சம் வாய்ந்தவனே. கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தையே பரிசாகப் பெறுவதாக இருந்தாலும், தலைவி யின் காதலை விட ஆற்றாத உள்ளங்கொண்டவன்:

கடல்சூழ் மண்டிலம் பெறினும் விடல் சூழலன் நான் கின்னுடை நட்பே.

(குறுந்தொகை, 300 : 7-8.)

மேலும், தலைவன் வேந்தல்ை ஏவப்பட்டு வெளியூருக்கு வினையாற்றச் சென்றாலும், தலைவியை விட்டுப் பிரிந்திருக்க ஆற்றாமல், சென்ற ஊரிலே தங்கிப் பின் வருதலை யறியாது உடனே தன் தேரில் வந்துவிடுகின்றான்:

  • * * * * * * * * * * * * * * * ...................வேறுார் வேந்துவிடு தொழிலொடு செலினும் சேந்துவர லறியாது செம்மல தேரே

(குறுந்தொகை: 242 : 4-5.)

இவ்வாறு அன்பால் இணைந்து காதல் வாழ்வு வாழும் கணவன் மனைவியரின் வாழ்க்கை பல்லாற்றாலும் நனி சிறந்த தாகும்.