பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மலர் காட்டும் வாழ்க்கை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

(திருக்குறள் : 45.) என்று திருவள்ளுவர் கூறும் இல்வாழ்க்கைச் சிறப்பு,

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

(திருக்குறள் : 51.) என்றபடி இல்லாளைக் கொண்டே அமையும். இதனையே வள்ளுவப் பெருந்தகை,

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்

(திருக்குறள் : 52.)

என்று குறிப்பிடுவர்.

குடும்பக் கடமையினை, வீட்டுப் பொறுப்பினைப் பழந் தமிழர் பெண்ணிற்கே வழங்கிப் பெருமை பெற்றனர். இல்லாள்”, “மனையோள்’, ‘மனேமுதல் முதலிய சொற்கள் வீட்டுத் தலைமை மகளிர்க்கே தரப்பட்டது என்பதனை உணர்த் தும். மேலும் இச் சொற்களுக்கு நேரான ஆண்பாற் சொற்கள் தமிழில் இல்லை யென்பதும் அறியத்தக்கதாம்.

தலைவனும் தலைவியும் அன்போடு இணைந்து இனிதுற நடத்தும் இல்லறக் காட்சி யொன்றனைக் கூடலூர்கிழார் என்னும் சங்கச் சான்றாேர் இனிதுறக் கிளத்துவர்.

இறுகிய, கெட்டியான தயிரினைப் பிசைந்து புளிக்குழம்பு வைக்க எண்ணிள்ை தலைவி. அவளுடைய காந்தள் மெல் விரல்களால் கட்டித் தயிரைப் பிசைந்தாள். விரைவில் தயிர்க் குழம்பு வைத்துக் கணவனை விருப்புடன் உண்ண வைக்க வேண்டும் என்ற விருப்பினளாதலின், தயிர் பிசைந்த கையைத் தன் ஆடையிலேயே துடைத்துக்கொண்டாள். இவ்வாறு அவள் கையை ஆடையில் துடைத்துக் கொண்ட செயல்