பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பான வாழ்க்கை 17

அநாகரிகமாகாது: அஃது அவளின் செல்வச் சிறப்பினைக் குறிக்கும் குறிப்பாகும். கபிலரும் பாரியைப் பற்றித் தாம் பாடும் புறநானூற்றுப் பாடலில், பறம்பு மலையில் வாழும் குறத்தியர் தங்கள் வீட்டில் அடுப்பெரிப்பதற்குச் சந்தனக் கட்டைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டுள் 6лтгтгj":

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி ஆரம் ஆதலின் அம்புகை அயலது சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும் பறம்பு.........

(புறநானூறு : 108 : 1-4)

புளிகூட்டிய தயிர்க் குழம்பினை ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பில் ஏற்றுகின்றாள். அப்போது தாளிப்புச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே குவளை மலரைப் போன்ற தன் மையுண்ட கண்களில் தாளிப்பினது புகை மணப்பத் தானே துழவிச் செய்த இனிய புளிப்பையுடைய குழம்பைத் தன் கணவனுக்கு மகிழ்ச்சியுடன் பரிமாறினுள். கணவனும் இனிதாக இருக்கின்றது என்று சொல்லி உண்டான். அப் பாராட்டைக் கேட்டதும், இயல்பாகவே பொலிந்து விளங்கும் அவள் நெற்றி, உவகையால் மேலும் பொலிவு சிறிது கூடுவதாயிற்று. (மகிழ்ச்சியை அவள் மிகுதியாக வெளிப்படுத்தி யிருப்பின் அது தருக்கின்பாற்படும்; மகிழ்ச்சியைப் புலப்படுத் தாமலே இருந்திருப்பின் உணர்வு சான்ற பெண்ணுக மாட்டாள். எனவேதான் நுண்ணிதின் மகிழ்ந்தன்று” என்றார் புலவர்.)

இவ்வினிய இல்லறக் காட்சியினைப் புலவர் சொற்களாற் காண்போம்:

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்

ம.-2