பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மலர் காட்டும் வாழ்க்கை

குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.

(குறுந்தொகை : 1.67.)

குடும்பத் தலைவன் தன் மனைவி மக்கள் என்று மட்டும் காப்பாற்றி நின்றால் அது போதாது. செல்வர்க் கழகு செழுங் கிளைத் தாங்குதல்’ என்பர். ‘அன்பெனப்படுவது தன்கிளை செருமை” எனக் குறிப்பிடும் கற்றறிந்தார் ஏத்தும் கலி. பழந் தமிழகத்தில் ஆடவர் பண்பே பொருள் தேடிவருவதற்குப் பிரிந்து சென்று பொருளிட்டி வருவதே என்று நற்றிணைப் பாட்டொன்று நவிலும்.

செயல்படு மனத்தர் செய்பொருட்கு அகல்வர் ஆடவர் அது.அதன் பண்பே

(நற்றிணை : 24 : 8-9.)

மேலும் வழிவழி வந்த குடும்பப் பொருள் கொண்டு வாழ் வதனைப் பழந்தமிழர் உயர்ந்த வாழ்க்கையாகக் கொள்ள வில்லை. அவ்வாறு முன்னேர் தேடிவைத்த பொருளைச் செலவு செய்து அழிப்பவர்களைச் சமூகமும் சான்றாேர்களும் பொருட் படுத்துவதில்லை. பொருளற்றாேளின் வாழ்க்கையோ இரந்து உயிர் வாழ்தலினும் இழிவானதாகும்.

உள்ளது சிதைப்போர் உளர்.எனப் படாஅர் இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு.

(குறுந்தொகை : 283 : 1-2.)

மேலும் ஆடவர்க்குக் கடமையே உயிர் என்பதும், மகளிர்க்கு அவ் ஆடவரே உயிர் என்பதும், அக்காலத்துக் கோட்பாடாக இலங்கியது: