பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பான வாழ்க்கை 19

வினையே ஆடவர்க்கு உயிரே, வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்.

(குறுந்தொகை : 1.35 : 1-2.)

திருவள்ளுவரும் விருந்து போற்றலும், பிறர்க்கு உதவி செய்தலும், இல்வாழ்வோர்க்கு இயைந்த சீரிய கடமைகள் என்பதனை,

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு

(திருக்குறள் : 81)

என்று குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களின் நல்வாழ்விற்காக என்று பொருள்தேடக் கொடிய பாலை வழியில் போகத் துணி யும் நெஞ்சத்தினைப் பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சம்’ என்று போற்றுகின்றாள் தலைவி.

பொருளால் ஈதலும் இன்பமும் புகழும் கிடைக்கின்றன. சோம்பலோடு வீட்டில் அமைந்து கிடப்பவர்க்கு இம் மூன்றும் வந்தியையா:

இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்மென வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை.

(நற்றிணை : 214 : 1-3)

விருந்தோம்பும் பெருவாழ்க்கையினை மகளிர் விரும்பினர். போக்குவரத்து வசதிகளும், காசு கொடுத்துச் சுவையுணவு கொள்ளும் உணவுச்சாலைகளும் நன்கமையாத அப்பழங் காலத்தில் விருந்தோம்பற்பண்பு சமுதாயத்தில் ஒர் இன்றி யமையாத அங்கமாக மிளிர்ந்தது. தன் ஊரிலிருந்து காலையில் பயணத்தைத் தொடங்கி, பொழுது சாய்ந்தவுடன் மாலையில்