பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மலர் காட்டும் வாழ்க்கை

ஒர் ஊரில் தங்கி, மீண்டும் மறுநாள் விடியற்காலையில் பயணம் தொடங்குவதென்பது பழங்காலத்து வழக்கமாகும். அவ்வாறு மாலைக்காலத்தில் வந்து தங்கும் விருந்தினரை அவ்வூர் மக்கள் விருந்திட்டுப் படுக்க இடந்தந்து போற்றுவது தமிழர் வழக்கம். இரவிலே தெருக்கதவைத் தாளிட முற்படுமுன், யாரேனும் விருந்தினர் வந்துள்ளனரா என்று பார்த்தே கதவடைக்கும் பழக்கம் பண்டை நாளில் இருந்தது என்பதனைக் கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடல் உணர்த்தும்.

புள்ளும் மாவும் புலம்பொடு வதிய நள்ளென வந்த நாரின் மாலைப் பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளிரோ எனவும் வாரார் தோழிநம் காத லோரே.

(குறுந்தொகை : 118.)

விருந்தினர் மாலை நேரத்தில் வந்து வீட்டுத் தெற்றியில்திண்ணையில் குழுமுவர். மையுண்ட கண்களையுடைய மகளிர், கனத்தையுடைய குழையணிந்த மகளிர், தம் கையே கருவியாக நெய்யை வார்த்து வற்றிய விளக்கு துயரத்தை எழுப்புகின்ற மாலைக்காலத்தில் பெறுதற்குரிய காதலர் விருந்தினராக வீட்டிற்கு வந்து, தலைவியின் ஏக்கத்தைப் போக்கி உடல் மெலி வினை நீக்குவதாகக் குறுந்தொகைப் பாட்டொன்று குறிப்பிடு கின்றது:

கயலே ருண்கண் கணங்குழை மகளிர் கைபுனை யாக நெய்பெய்து மாட்டிய சுடர்துய ரெடுப்பும் புன்கண் மாலை அரும்பெயர் காதலர் வந்தென விருந்தயர்பு மெய்ம்மலி யுவகையி னெழுதரும்...

(குறுந்தொகை : 398 : 3-7)