பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மலர் காட்டும் வாழ்க்கை

‘தலைவி தன் சிறு மோதிரம் அணிந்த மெல்லிய விரல்கள் சிவக்குமாறு வாழையிலையை அறுத்து வல்லவாறு அமைத்துப் புகை சேர்ந்த கண்களோடு நெற்றியில் அரும்பிய சிறு வியர்வையைத் தன் முன்தானையால் துடைத்துக் கொண்டு என்னிடம் ஊடல் கொண்டு அட்டிலறையில் உள்ளாள். இப்போது விருந்தினர் வரின் சினம் தணிந்த அவளின் கூரிய பற்கள் புன்முறுவல் செய்யும் முகத்தைக் காணலாம்’ என்கிருன்.

சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகை இப் புகையுண்டு அமர்த்த கண்ணள் தகைபெறப் பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர் அந்துகில் தலையின் துடையினள் நப்புலந்து அட்டி லோளே அம்மா அரிவை எமக்கே வருகதில் விருந்தே சிவப்பான்று சிறியமுள் எயிறு தோன்ற முறுவல் கொண்ட முகம்காண் கம்மே.

(நற்றிணை : 120 : 4-12)

இவ்வாறு பழந்தமிழரின் அன்பான இல்லற வாழ்க்கை, பண்பும் பயனும் சான்ற பண்பாட்டு வாழ்க்கையாக விளங்கியது. பெண்ணின் பெரும் பண்புகள் அவள் இல்லறக் கடமைகளே இனிதுற ஆற்றுகின்ற பொழுது திறனுடன் விளங்கின. இல்வாழ்க்கை என்னும் தேரின் அச்சாணியாக அவள் விளங்கினுள். பெண்ணின்றேல் ஆணில்லை, ஆணின்றேல் பெண்ணில்லை!” என்றபடி, அவர்களின் அன்பான இல்லறம் தலைவியின் பொறுமைப் பண்பாலும் விருந்தோம்பற் சிறப்பாலும் சிறப்புறத் தலைவனின் பொருள் தேடும் முயற்சியால் இல்லறம் இனிதுறப் பொலிந்தது என்பதனை நம் தமிழ்மொழியின்கண் எழுந்துள்ள சங்கத்தமிழ் இலக்கியங்கள் வகையுற எடுத்து மொழிகின்றன.