பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மங்கல மனையறம்

பழந்தமிழர் வாழ்வு பெரும்பகுதியும் களவின்வழி வந்த கற்பாகக் துலங்கியதே எனலாம். காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம்’ என்று பிற்காலப் புலவரொருவர் கூறுவதுபோல, செம்புலப் பெயல் நீர்போல’ அன்புடை நெஞ்சங்கள் இரண்டு ஒன்றாய்க் கலந்து இல்லற நெறியில் இயைந்து நிற்பது சங்ககாலத் தமிழரிடையே நாம் காணும் வழக்காருகும். இல்லற வாழ்வில், மாண்புறு மனை வாழ்வில் ஒன்றுகூடும் தலைவனும் தலைவியும் பிறப்பாலும், குடிப்பிறப்பாலும், ஆண்மையாலும், வ ய த ா லு ம் , உருவாலும், தோற்றத்தாலும், நிறையாலும், அருளாலும், உணர்வாலும், திருவாலும் ஒத்திருத்தல் என்பர் முறைப்பட எண்ணி முந்து நூல் கண்ட தொல்காப்பியனுர்.

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே

(தொல். பொருள் : 269)

சங்ககாலத்தில் திருமணம் தலைவனும் தலைவியும் ஒருவரை யொருவர் பார்த்துக் காதல்துணையாக நிகழ்ந்ததே யன்றிச் சாதி, சமயம், செல்வம், செல்வாக்கு, வாழ்நிலை முதலிய வற்றின் காரணமாக நிகழ்ந்திலது. திருமணச் செவ்வியடைந்த ஒர் ஆணும் பெண்ணும் விதியின் வழியே எதிர்ப்பட்டுக்