பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மலர் காட்டு வாழ்க்கை

காதலிற் கலந்த பின் வாழ்வில் ஒன்றுபடுவர் என்று தொல்காப்பியனர் குறிப்பிடுவர்:

ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோ யிைனும் கடிவரை யின்றே

(தொல். பொருள் : 90)

குறுந்தொகைப் பாடலொன்று அதற்கு விளக்கந்தருவது போல் அமைந்துள்ளது. எங்கேயோ பிறந்து முன்பின் ஒருவரையொருவர் அறியாத தலைவனும் தலைவியும் ஊழ்வலி யால் ஒன்றுகூடி வாழ்வில் இயைந்தனர். ஆதுபோது தன்னை விட்டுத் தலைவர் பிரிவரோ எனப் பிரிவச்சங் கொண்ட தலைவியைத் தேற்றும் போக்கில் தலைவன் கூற்றாய் அமைந் துள்ள பாடல் வருமாறு :

யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சங் தாங்கலந் தனவே.

(குறுந்தொகை : 40)

இப் பாடல் கொண்டு, வாழ்வில் முன்பின் பார்த்திராத, அறிந்திராத, பழகியிராத, உறவல்லாத தலைவனும் தலைவியும் விதியின் விளைவால் ஓரிடத்தே எதிர்ப்பட்டுக் கண்டு, காதல் கொண்டு உள்ளங்கலந்து உயர்வாழ்வாம் கற்பு வாழ்விற்கு ஒருப்பட்டு நின்றனர் என்று தெளியலாம்.

இல்லற வாழ்வில் ஈடுபடும் மகளிர்க்கு இன்றியமையாப் பண்புகளாகத் தொல்காப்பியனர் கற்பு, காமம், நல்