பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கல மனையறம் 25

லொழுக்கம், பொறையுடைமை, நிறையுடைமை, விருந்து போற்றல், சுற்றம் போற்றல் முதலியனவற்றை முறையே குறிப்பிட்டுள்ளார்.

கற்பும் காமமும் கற்பா லொழுக்கமும் மெல்லியற் பொறையும் கிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

(தொல். பொருள் : 15.0)

இத்தகைய மனையற மாட்சிகளை மாண்புறப் பெற்ற மகளிரை மனை முதல்’ என்ற மங்கலச் சொல்லால் பழந்தமிழர் வழங்கினர். இல்லாள் என்றும் வாழ்க்கைத்துணை என்றும் வகையுறத் திருவள்ளுவர் வழங்கினர். இனிய இல்லறப் பெற்றிக்கு இல்லாளே! இன்றியமையாதவள் என்பது திருவள்ளுவர் கருத்து.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்.

(திருக்குறள் : 52)

இல்லதென் இல்லவள் மாண்பால்ை உள்ளதென் இல்லவள் மானக் கடை.

(திருக்குறள் : 53)

தலைவன் வருவாய் அறிந்து அதற்கேற்பக் குடும்பச் செல வினைச் செட்டாகச் செய்து செம்மையாக இல்லறம் ஒம்பும் இனிய மகளிரை, ‘விழவு முதலாட்டி’ என்று போற்றினர். தலைவி முதன்முதலில் திருமணம் செய்துகொண்டு கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவ் வீட்டில் ஒரே ஒரு பசுதான் கட்டப்பெற்றிருந்தது. அப் பசுவொன்றால் கிடைக்கும் எளிய வருவாயைக் கொண்டே குடும்பம் நடந்தது. ஆனல் நற்பேறும்