பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலர் காட்டும் வாழ்க்கை

திருமகள் அன்ன பொற்புறு செவ்வியும் வாய்த்த இப் பெண் இவ் வீட்டில் அடியெடுத்து வைத்தபின் விழாக்கள் ஓயாது நடக்கும் இல்லமாகப் பொலிந்தது’ என்று துரங்கலோரியார் என்னும் பழந்தமிழ்ப் புலவரொருவர் பெண்ணுல் வந்த பேற்றினை, மங்கல மனைமாட்சியினை மனமாரப் போற்றிப் புகழ்கிறார். அவ்வினிய பாடல் வருமாறு:

உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே; இஃதோ ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை பெருங்லக் குறுமகள் வந்தென இனிவிழ வாயிற்று என்னுமிவ் ஆரே.

(குறுந்தொகை : 295)

ஆண் பெண் என்று அமைந்த இயற்கையின் இனிய படைப் பில் ஒவ்வொருவர்க்கென்று உரிய கடப்பாடுகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. தான் மேற்கொண்ட கடமையில் கண்ணுங் கருத்துமாயிருந்து செயலாற்றி வெற்றிபெறுவது ஆணின் செயற்பாடாகக் கருதப்பட்டது. இல்லிருந்து இனிய இல்லறம் ஒம்பும் நங்கை, தன் கணவனையே உயிராகக் கருதி நல்லறம் நாடி நின்றாள். இதனைப் பாடிய பெருங்கடுங்கோ என்னும் பைந்தமிழ்ப் புலவர்,

வினையே ஆடவர்க் குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்

(குறுந்தொகை: 185: 1-2.)

என்று பொருளுறப் புலப்படுத்தியுள்ளார்.

வினைமேற் சென்று இல்லறம் இனிதே நடத்த இன்றி

யமையாததாக விளங்கும் பொருளைத் தேடிவருதல் ஆணின் உயர் கடமையாகும். இல்லையென்று வந்தவர்க்கு இல்லையென்று