பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கல மனையறம் 27

கூருமல் ஈதல் மனையறத்தின் மாட்சியெனக் கொள்ளப்பட்டது. ‘இல்லோர் வாழ்க்கை இரவினும் இழிவு எனக் கருதப்பட்டது. எனவே, பொருளிலார்க் கிவ்வுலகமில்லை’ என்ற பொருள் பொதிந்த மொழியினை மனத்துட்கொண்டு ஆடவர் பொருட் பணிக்கு அகன்றனர். அவ்வாறு பொருள் தேடித் தத்தம் மகளிரைப் பிரிந்து செல்வது அவர்தம் கடமையாக வைத்தெண்ணப்பட்டது.

இவ்வாறு முயன்று தேடிய பொருளைக் கொண்டு தம் இல்லற வாழ்வை இனிதே நடாத்துதலும், வருவார்க்கு எல்லாம் வரையாது நல்லுணவு நல்கலும், இனிய இல்லறத்தின் இயைந்த வெற்றியாக கருதப்பட்டது. முதற்கண் கொண்ட கொழுநனே உண்டியால் ஒம்பல் மனைவியின் மாண்புறு கடமை என்பதனேக் கூடலூர்கிழார் என்னும் குறுந்தொகைப் புலவர் கவினுறக் கிளத்துகின்றார். ஒரு குடும்பத்தின் தலைவி தன் கணவனுக்குத் தன் கையாலேயே சமைத்த உணவினை உவப் புடன் பரிமாற விருபினள். எனவே ஆடை கட்டிய கட்டித் தயிரைத் தன் காந்தள் மலரனைய மெல்லிய விரல்கள் கொண்டு பிசைந்து, தயிர்க்குழம்பு வைக்க ஆயத்தம் மேற்கொண்டாள். அவ்வாறு அவள் சமையல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் காலை யில் மெல்ல அவள் சேலை நெகிழ்ந்தது. நெகிழ்ந்த சேலையினைத் தயிர் பிசைந்த கைவிரல்களாலேயே பற்றிச் செறிய உடுத்துக் கொண்டாள். தாளிப்பு நேரமும் வந்தது. அவளுடைய கண் களோ குவளே போன்று அழகும் ஒளியும் உமிழும் கவிஞர் கண்கள். அக் கண்களில் தாளிப்புப் புகை சூழ்கிறது.

எவருடைய துணையுமின்றித் தானகவே தயிர்க் குழம்பாக்கிச் சமையற் பணியினை முடிக்கிருள். கணவனும் உணவு உண்ண வந்துவிட்டான். அவன் மகிழ்வுடன்

உண்ணப் பரிமாறுகின்றாள் அவன் உயிர்த் துணைவி. அவனே இனிது இனிது’ என்று கூறித் தன்மனையறத் தினே மாண்புறுத்தும் மனைவியைப் பாராட்டினன். அதுபோது மனேமுதலாம் அக் குடும்பத் தலைவியின் முகம் நுண்மையாக மகிழ்ந்தது.