பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மலர் காட்டும் வாழ்க்கை

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான் துழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே

(குறுந்தொகை : 167) மற்றாென்றும் ஈண்டு எண்ணிப் பார்க்கத்தக்கது. தன் கணவன் அருமுயற்சியால் வந்த பொருளால் தன் குடும்பத்தை யும் நடத்தி, வருந்தி வந்தவர்க்கு விருந்தும் தலைவி தந்தனளே யொழியத் தன் தந்தை தந்த பொருளாலோ, உணவாலோ அவள் மகிழ்வடையவில்லை. மாருக அவள் தந்தையின் உதவி யினை மறுத்தும் நின்ற மாண்பினைக் கோண்கிரும்.

இன்று குடும்பம் நடத்தும் தலைவி சின்னஞ் சிறுமியளாய் இருந்த நாளில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்று இது. தேன் கூட்டிக் கலந்த இனிய சுவைகொண்ட பாலினைக் கதிரவனின் பொற்கதிர்களைக் கொண்ட பொற்கிண்ணம் ஒன்றில் ஏந்திக் கொண்டு, அடிக்கும் பொழுது மேனியிற் சுற்றிப் படியும் மெல்லிதான நுனியையுடைய சிறுகோலினை மற்றாெருகையில் எடுத்துக்கொண்டு, இதனை உண்க’ என்று அச் சிறுகோலினை அச்சமூட்டுவான் வேண்டி அவளை நோக்கி ஒங்குதலும், அதனின்றும் தப்பிப் போதற்கு நினைத்து, தெளிவும் நீர்மையும் நிறைந்த முத்துக்களைப் பரவலாகக் காலில் இட்டிருக்கின்ற பொற்சிலம்பானது ஒலிக்க, செவிலியர் கையிற் பிடிபடாது அவள் தத்தித் தத்தி நடந்து நெளிந்து ஓடிவிடுவாள். நரையும் மூத்த அனுபவமும் நிறைந்த செவிலித் தாயர் அவளை விடாது பின்தொடர்ந்து சென்று அவளைப் பிடித்துப் பொற்கிண்ணத் தில் இருக்கும் பாலை ஊட்ட இயலாதவராய் மெலிவுற்று வருந்தித் தம் முயற்சியைக் கைவிடுவர். அவளோ முத்துப் பந்தர்க்கீழ் இப்படியும் அப்படியும் ஒடி அவர்களை அலைக்கழித்து அச் செவிலியரின் ஏவலை மறுக்கும் சிறுகுறும்பினை-விளையாட் டினைச் செய்பவளாக இருந்தாள். -