பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கல மனையறம் 29

ஆளுல் அக் காலம் கழிந்தது இப்போதோவெனில் அவள் இல்லறம் ஆற்றுவதற்கு இயைந்த அறிவையும் ஒழுக்கத்தையும் எவ்விடத்தே உணர்ந்து கொண்டனளோ தெரியவில்லை. தன்னை மணந்துகொண்ட கணவனது குடியானது ஒருகால் வறுமையுற்று வாடியது: உண்ணும் உணவின்றியும் பொழுது கழிந்தது. இதனை அறியவந்த அவளுடைய தந்தை கொணர்ந்த கொழுவிய சோற்றைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை; அச் சோற்றை நெஞ்சாலும் நினைக்காத நீர்மையளாயினுள். நீர் செல்லும் போக்கில் வளைந்து வளைந்து உருவாகிக் கிடக்கும் கருமணலைப் போல, வேளைதோறும் உண்பதையும் கைவிட்டு மறந்து, தன் கணவனுடைய குடியின் பொருள் நிலைக்கேற்றப் படி தன்னைச் சரிசெய்து கொண்டு ஒழுகுவாளாய்த், தானும் ஒரு பொழு துணவை விட்டு, அதற்கடுத்த வேளை உண்டு வாழும் சிறிதான வன்மை கொண்டவளாக விளங்குகின்றாள்.

பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப் புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்ணென்று ஒக்குபு பிழைப்பத் தெண்ணிர் முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரிமெலிந்து ஒழியப் பந்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்க் தனள்கொல்? கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையளே.

(நற்றிணை : 1.10)

பிறந்த வீட்டுப் பெருவாழ்வை மறந்து, புகுந்த வீட்டின் வளனுக்கேற்பத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழும்