பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மலர் காட்டும் வாழ்க்கை

தலைவியின் தலையாய குடும்பப் பண்பாடு போதனரின் இந் நற்றிணைப் பாட்டால் நலமுற விளங்குகின்றது.

ஆரியவரசன் யாழ்ப் பிரகத்தனுக்குப் பொய்யா நாவிற் கபிலர் தமிழ் அறிவுறுத்துவதற்கு இயற்றிய பாட்டு குறிஞ்சிப்பாட்டாகும். இக் குறிஞ்சிப்பாட்டில் தலைவன் ஒருவன் தான் விரும்பிய தலைவியைத் தவருது மணப்பதாக உறுதிமொழி கூறுங்கால், வருவோர்க்கெல்லாம் வரையாது வழங்கி விருந்துபோற்றி நிற்பேன்’ என உரைக்குந்திறன், பண்டைத் தமிழர் இல்லறக் கடமைகளுள் இன்றியமையாத வொன்றென வருந்தி வந்தவர்களுக்கு விருந்து போற்றி நின்ற திறத்தினை எடுத்து மொழிகின்றது:

சாறு அயர்ந்தன்ன மிடாஅச் சொன்றி வருங்ர்க்கு வரையா வளங்கர் பொற்ப மலரத் திறந்த வாயில் பலருணப் பைங்கிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில் வசையில் வான்திணைப் புரையோர் கடும்பொடு விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை நின்னெடு உண்டலும் புரைவுது என்றாங்கு அறம்புனை யாகத் தேற்றிப் பிறங்குமலை மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது

(குறிஞ்சிப்பாட்டு : 201-209.)

இதுபோன்றே சிறப்புடைத்தான சிறுபானற்றுப் படையிலும், பசியால் வருந்திய மெல்லிய இடையையுடைய வளையணிந்த கிணை வாசிப்போன் மனைவி, சமைப்பதற்கான பண்டம் ஒன்றுமில்லாக் காரணத்தால், குப்பைக் கீரையைத் தன் கூர்மையான நகத்தினுல் கிள்ளி, அக் கீரையோடு கூட்டிச் சமைக்க உப்புக்கூட இல்லாமல் வேகவைத்தாள். வளமும் வறுமையும் மாறிமாறி வருவன என அறியாதவர்கள் அவ்வுணவைப் பார்த்தால் நகைப்பார்களே என நாணங் கொண்டு, தலைவாயிலைச் சாத்தித் தாளிட்டுவிட்டு வறிய தன்