பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கல மனையறம் 31

சுற்றத்தினருடன் உள்ளே உட்கார்ந்து அவர்களோடு அக் கீரைக் கறியினைப் பகிர்ந்து உண்டாள்.

ஒல்குபசி யுழந்த ஒடுங்குநுண் மருங்குல் வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த குப்பை வேளை உப்பிலி வெந்ததை மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து இரும்பே ரொக்கலொடு ஒருங்குடன் மிசையும்.

(சிறுபாணுற்றுப்படை : 1.35-139)

இவ் விருந்து போற்றும் திருந்திய பண்பினையே நற்றிணை,

அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகன்

(நற்றிணை : 142 : 9-11)

என்றும்,

புறநானூறு ,

அமிழ்தட்டு ஆனக் கமழ்குய் யடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை மகளிர்

(புறநானூறு : 10 : 7-9)

என்றும்,

து 4 ....................உள்ளது தவச்சிறி தாயினும் மிகப்பலர் என்னுள் நீணெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும் இற்பொலி மகடூஉ

(புறநானூறு : 331 : 6-9)

என்றும் குறிப்பிடக் காணலாம்.