பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மலர் காட்டும் வாழ்க்கை

இவ்வாறு வழிவழி வந்த விருந்தோம்பற் பண்பினையே கவிச்சக்கரவர்த்தி கம்பநாடர்,

பெருந்த டங்கண் பிறைநுத லார்க்கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விழைவன யாவையே!

(கம்பராமாயணம் : பாலகாண்டம் : நாட்டுப்படலம் : 36) என்று குறிப்பிட்டார். o

எனவே மனைக்கு விளக்கமாயமைந்த மடவாள் தான் பிறந்தகுடியின் பண்பாட்டைப் பற்றிநின்று, புகுந்த குடிக் கேற்பத் தன்னைச் சீர்படுத்திக்கொண்டு, கணவனைத் தன் இனிய உணவுச் சுவையால் மகிழ்வித்து, வைகலும் வந்த சுற்றத் தினரையும் விருந்தினரையும் அகமும் முகம் மலர விருந் தோம்பி வாழும் நிலையே மங்காத மனையற மாண்பு என்று கொள்ளப்படும் என்பது தமிழிலக்கியங்கள் கொண்டு தெளியப் பட்டது.