பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தலைவியின் தவிப்பு

பழந்தமிழர் தம் வாழ்க்கையினை அகம் புறம் என இரு வகையாகப் பிரித்தனர். காதல் வாழ்வு அகத்துறைப்பாற் பட்டது. காதலன் காதலிமாட்டுக் கொள்ளும் உள்ள நெகிழ்ச்சியினை அன்பின் ஐந்திணை நூல்கள் நலமுற நவில் கின்றன.

காதல் வாழ்க்கைக்கு முதற்கண் தேவையானவை, ஒருவர் மாட்டு ஒருவர் கொள்ளும் அன்பும், நம்பிக்கையுமே யாகும்.

தலைவன்மாட்டுக் கொண்ட காதலின் ஆழத்தினையும் பண்பின் பரப்பினையும் பாங்குற எடுத்து மொழிகிருள் ஒரு நற்றிணைத் தலைவி.

தோழி! தலைவர் சொன்ன சொல்லினின்றும் மாருதவர். நீண்ட காலம் நிலைத்து நிற்கும் இனிய பண்புகள் இயையப் பெற்றவர்: எந்தக் காலத்திலும் என் தோள்களை விட்டு நீங்காதவர். தாமரை மலரில் உள்ள தாதினை ஊதி, மலையுச்சி யில் வளமாக வளர்ந்திருக்கும் சந்தன மரத்திலேகட்டிய இனிய தேன்போல், உயர் பண்பு வாய்த்தவர்களின் உறவுகள் உயர்வு வாய்ந்தவை யாகும். நீரில்லாமல் நிலவுலகம் இயங்க முடியா தது போன்றே, அவர் இல்லாமல் என் வாழ்வு அமைய முடியாது. ஆதலால் என்னைக் கைநெகிழ விடாமல் விரும்பிக் காதல் நெஞ்சினை அருளுவார். அவர் பிரிவால் என் நெற்றி பசலையுறுவதைக் கண்டு அஞ்சும் பான்மையுடையவர் அவர். எனவே, ஒருநாளும் துன்பம் விளைக்க விரும்பமாட்டார். துன்பம் செய்தலை ஒருபோதும் அறியாத நல்ல பண்புகள் வாய்க்கப்பெற்றவர் அவர்.’

Lo -- 3