பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ன் வி ட்ட 35

பொருள் திரட்டும் முயற்சியினை மேற்கொண்டு தலைவன் பிரிய நேருகிறது. தலைவி வருந்துகிருள். அதிலும் காதலன் இல்லாத நேரத்தில், மாலைக் காலம், கொலைக்களத்தில் பணி யாற்றும் அயன்மையுடைய கொடியவர் போன்று வருகின்றது.

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்.

(குறள் : 12:24)

கார்காலத்து மாலைப் போதில் மேற்றிசை வானம் சிவக் கின்றது. முல்லைப் போதுகள் முகையவிழ்ந்து மலரத் தொடங்கு கின்றன. காதலன் உடன் இருக்க வேண்டிய அந்த மாலைக் காலத்தில் தலைவியின் துன்பம் மிகுதிப்படுகின்றது. எனவே, மயங்கித் துயரில் மாழ்குகின்றாள் தலைவி. அவள் காதல் துன்பத்தால், கோழி குரல் கொடுத்து மக்களை எழுப்பும் காலை நேரமும் (அப்போதும் அவளுக்குத் தூக்கம் இல்லை), நண்பகற் போதும், மாலைக்காலம் போன்று பிரிவுத் துன்பந் தந்து மனத்தை மாழ்குறச் செய்கிறதே என்று புலம்பி நைகின்றாள்.

சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந்து எல்லுறு பொழுதின் முல்லை மலரும் மாலை என்மனர் மயங்கி யோரே குடுமிக் கோழி நெடுநகர் இயம்பும் பெரும்புலர் விடியலும் மாலை பகலும் மாலை துணையி லோர்க்கே.

(குறுந்தொகை : 234)

ஒர் இராப்பொழுதில் உறக்கம் வாராது உழன்று ஒருவாறு உறக்கம் வந்து உறங்குகையில், தலைவன் தன் தோளினைகளைத் தழுவியதாகக் கனக் கண்டாள். உடனே தான் படுத்திருந்த படுக்கையினைத் தடவித் தன் பக்கலில் காதலன் உள்ளானே எனப் பார்த்தாள். அவன் இல்லாத பொல்லா நிலை கண்டு உள்ளம் புழுங்குகின்றாள் :