பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மலர் காட்டும் வாழ்க்கை

கேட்டிசின் வாழி தோழி! அல்கல் பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇய வாய்த்தகைப் பொய்க்கன மருட்ட ஏற்றெழுந்து அமளி தைவ ந்தனனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற அளியேன் யானே.

(குறுந்தொகை : 30)

இக் காட்சியினையே திருவள்ளுவரும்,

துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்

நெஞ்சத்த ராவர் விரைந்து

(குறள் : 12.18)

என்று குறிப்பிடுகின்றார்.

இடைக் காலத்தே சமய இலக்கியங்களைப் படைத்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் நாயகன்-நாயகி பாவத்தில் ஆண்டவனைப் பாடியபொழுது, இதே போக்கினைக் கையாண்டு, இறைவன்மாட்டுத் தாம் கொண்ட ஆராவன் பினைப் புலப்படுத்தியுள்ளனர். தலைவி கூற்றாக நம்மாழ்வார் கடலை நோக்கிப் பாடும் பாடலில் தலைவி திருமால் மாட்டுக் கொண்ட கழிபெருங் காதல் துன்பம் கனிந்திலங்கக் காணலாம். காமம் மிக்க கழிபடர் கிளவி போன்று இப் பாட்டு அமைந்துள்ளது :

காமுற்ற கையறவோடு எல்லா இராப்பகல் முேற்றக் கண்துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால் தீமுற்றத் தென்னிலங்கை ஊட்டின்ை தாள்கயந்த யாமுற்றது உற்றாயோ வாழி கனைகடலே?

(திருவாய்மொழி: 2: 1: 4)

தலைவன் பிரிந்து சென்ற காலையில் தலைவி படும் காதல்,

துன்பத்தினைத் தற்காலக் கவிஞராம் பாரதியாரும் திறம்படச் சொல்லோவியமாகக் காட்டியிருக்கிறார் : .