பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பொய் மழை

பழந்தமிழர்தம் காதல் வாழ்வு தூயது: போற்றத்தக்கது, ஒருவர் உள்ளம் அறிந்து ஒருவர் உருகி நிற்பது. காதலி படும் துன்பத்தினைத் தான் உற்ற துன்பமாகக் காதலன் கொள்கிருன்; இதுபோன்றே காதலன் நடக்கும் வழியில் எதிர்ப்படும் இன்னல்களேயும் இடையூறுகளையும் எண்ணிக் காதலி கலக்க முறுகிருள். ஒருவர் துன்பத்தில் ஒருவர் பங்கு கொண்டு உள்ளம் கசிந்துருகும் தியாக வாழ்வு, காதலர் வாழ்வென்ப தனைச் சங்க இலக்கியங்கள் உணர்த்தி நிற்கின்றன.

முல்லை நிலத்தின் வாழ்வு கற்பு நிறைந்த காதல் வாழ்வு எனக் கவினுறப் புலவர்களால் போற்றப்பெறுவதாகும். காடும் காட்டைச் சார்ந்ததுமான முல்லைநிலம் கவின்மிகு காட்சிகளைத் தன்னகத்தே கொண்டு எழில் துலங்கி நிற்ப தாகும். தமிழர் தங்கள் செல்வமாகக் கருதிப் போற்றிய ஆநிரைகள்-பசுக்கள் மேய்ச்சல் நிலந் தேடிச்சென்று புல்லருந்திப் பால்வளம் நல்கும் பயன்மிகு நிலமாகவும் முல்லை நிலம் கூறப்படும். ஆயர் வாழ்வு அழகுறத் துலங்குவது இந் நிலத்திலேயே யாகும்.

முல்லை நிலத்திற்குரிய பெரும் பொழுதாகக் கார்காலத்தை -அதாவது மழைக்காலத்தையும், சிறு பொழுதாக மாஜலக் காலத்தையும் கொள்வர். ‘காரும் மாலையும் முல்லை’ (அகத். 6) என்று தொல்காப்பியருைம், மல்கு கார் மாஜல முல்லைக்குரிய (அகத். 15) என்று நம்பியகப் பொருள் நாற்கவிராச நம்பியும் கூறுவர். ஒவ்வொரு நிலத்திற்கும் பெரும்பொழுதும் சிறுபொழுதும் அவ்வந் நிலத்தில் வாழும் மக்கள், அவ்வக் காலங்களில் கூறும் உணர்ச்சிகளின் நிலைக் களன்களாக அமைந்துள்ளதனைக் காணலாம். இது நம் முன்னேர்தம் உளவியல் நுட்பமறியும் பாங்கினையும்,