பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய் மழை 39

இயற்கையின் போக்கினை இனிதுணர்ந்த திறத் தினையும் தெரிவிக்கும்.

விழைவதுரஉம் விட்டேம் என்பார்க்கும் மழைவேண்டும் என்பர் திருவள்ளுவர். மழையே மாநிலத்து வாழும் மக்கள் உணவுண்டு உயிர்வாழச் செய்வது. விசும்பில் துளி வீழி னல்லால் இங்குப் பசும் புல்லும் தலை காட்டுதல் அரிதாகப் போய்விடும் (குறள். 16). எனவே மழைக்காலத்தை மகிழ்ந்து போற்றிப் பாாரட்டுவது மக்கள் செயலாக விளங்கியது.

வாழ்க்கைக்குத் தேவையானது பொருள். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ (குறள். 247) என்றார் பொய்யில் புலவர். முனிவரும் மன்னனும் முன்னுவ பொன்னல் முடியும் என்பர். காதல் வாழ்வுக்குப் பொருள் தட்டின்றிக் கிடைக்கவேண்டும். கொடிது கொடிது வறுமை; அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்றார் gparabauurrrr. “It is better to live rich than to die rich” என்று சொன்னர் மேலைநாட்டு அறிஞர் டாக்டர் ஜான்சன். முதுமையிற் செல்வகை மடிவதினும் இளமையில் செல்வ முடையோய்ை வாழ்தல் சிறந்தது என்றார் அவர் கற்றறிந் தார் ஏத்தும் கலியும், பொருளில்லான் இளமைபோல் புல்லென்றாள்” (கலி. 38 : 1.5) என்ற உவமை வழி, இளமை வாழ்வில் இயந்திருக்க வேண்டிய பொருளைப் பற்றிக் கூறியிருக்கக் காணலாம்.

வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளைத் திரட்டிவரச் செல்கிருன் காதலன். தலைவியை விட்டுப் பிரிவது அவனுக்குப் பெருந் துன்பமாக இருக்கின்றது. ஆயினும் காதல் வாழ்விற்குப் பொருள் வேண்டுமே? எனவே பெறற்கரிய காதலியைதலைவியைப் பிரிந்தும் பெறற்குரிய பொருளைத் தேடிவரச் செல்கிருன். தலைவியைப் பிரிவதற்குமுன் தலைவியிடம் கார் காலம்-மழைக் காலம் தொடங்குவதற்கு முன்னுல்

உறுதியாகத் தான் திரும்பி வந்துவிடுவதாகக் கூறிச் செல்