பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மலர் காட்டும் வாழ்க்கை

கிருன். தலைவியும் அவன் சொல்லைத் தேறி அவனுக்கு விடை கொடுத்தனுப்புகின்றாள்.

பழந்தமிழ் நாட்டில் இயற்கை பெரும்பாலும் பொய்ப் பதில்லை. அவ்வக்காலம் வரும்பொழுது, அவ்வக் காலங் களுக்கு உரிய இயற்கை மாற்றங்களை இனிதாகக் காணலாம். இயற்கை மனித வாழ்வில் நிலைக்களமாக இலங்கியதைக் காண லாம். கார்காலம் தொடங்கிவிட்டது. ஆனல் கார்காலத் தில் திரும்பி வருவதாகக் கூறிப் பிரிந்து சென்ற தலைவன் இன்னும் வரவில்லை; கார்காலமோ வந்துவிட்டது. அப்பொழுது பெய்த மழைக்கு முல்லைக் கொடி தளதளவென்று தழைத்து விட்டது. அரும்புகள் முகிழ்த்துவிட்டன. அவ் அரும்புகள் கார்காலத்தில் வெண்ணிறப் பற்கள் போலவும், அப் பற்களைக் காட்டிக் கார்காலம் தன்னை நகைப்பது போலவும் தலைவிக்கு தோன்றுகின்றன. தலைவன் கூற்றைத் தான் நம்பி வாழ்வதை எண்ணி நகையாடுவதுபோல் கார்காலம் விளங்குகின்றது என்கிருள் தலைவி. அவள் தோழியைப் பார்த்துப் பேசும் சொற்கள் இவை :

இளமை பாரார் வளங்சைஇச் சென்றாேர் இவனும் வாரார் எவன ரோவெனப் பெயல்புறங் தந்த பூங்கொடி முல்லைத் தொகுமுகை இலங்கெயி ருக நகுமே தோழி நறுந்தண் காரே!

(குறுந்தொகை : 126)

தான் துன்பப்ட்டால் உலகமே துன்பமயமாகக் காட்சி யளிக்கிறது என்று எண்ணுகிற போக்கு தலைவியிடம் உண்டு. இது போன்றே உலகமெல்லாம் இன்புற்று இருக்கும்பொழுது தான் மட்டும் துன்புற்றுத் தொல்லைப்படவேண்டியிருக்கிறதே என்று எண்ணும் மனப்போக்கும் தலைவியிடத்தே காணலாம். அன்போடு மகிழ்வோடு இதுகாறும் பலமுறை கண்டுவந்த முல்லைக்கொடியைத் தலைவி இப்பொழுது நோக்குகின்றாள்.