பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய் மழை 41


தனக்கு இன்பமூட்டிய இனிய முல்லை, இன்று தனக்குத் துன்பந் தந்து நிற்பதாகக் கருதினள். தன்னைப் பார்த்து அம் முல்லைக் கொடி நகைப்பதாக எண்ணுகின்றாள். முல்லைக் கொடியே! நீ வாழ்க. உன் சின்னஞ் சிறு வெண்ணிற அரும்புகளால் என்னைப் பார்த்துப் புன்முறுவல் காட்டி நகைப்பதுபோல் தோன்றுகிறாய். கணவனைப் பிரிந்து கலங்கித் தவிக்கும் என்னைப்போன்ற எளியவரிடத்தும் நீ இவ்வாறு செய்வது தகுமோ?’ என்று உருகிக் கேட்கின்றாள்.


முல்லை வாழியோ முல்லை நீகின்


சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை


நகுவை போலக் காட்டல்


தகுமோ மற்றிது தமியோர் மாட்டே?

                                      (குறுந்தொகை : 162 : 3-6)


பெய்ய வேண்டிய காலந்தில் பெய்யும் மழையே பருவ மழையாகும். பருவம் பொய்க்காது பெய்யும் அம் மழையினைப் பருவ மழை என்றால் பொருத்தமுடைத்து. அப் பருவ மழை தொடங்கிவிட்டது. தூறல் வி ழு கிற து . மயில்களின் உள்ளத்தில் களிப்புப் பொங்குகின்றது; எனவே, மகிழ்ந்து ஆடத் தொடங்குகின்றன. கொன்றை முதலான கார்கால மலர்கள் மலர்ந்து மணம் பரப்புகின்றன. ஆனல் எல்லாம் சரி. கார்காலத்தில் இயல்பாக நடைபெற வேண்டுவன வெல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆளுல் கார் காலத் தொடக்கத்தில் திரும்பிவந்து விடுவேன் என்று சொல்லிச்சென்ற தலைவன் மட்டும் இன்னும் திரும்பிவர வில்லையே; கார்காலம் வந்துவிட்டாலும் தலைவன் தேர் திரும்பி வருகின்றது என்று என்னிடம் வந்து சொல்வார் இல்லையே’ என்று தலைவி வருந்திக் கூறுகிருள்.


பொழுதோ தான்வந் தன்றே மெழுகான்று


ஊதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி