பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மலர் காட்டும் வாழ்க்கை

மரம்பயி லிறும்பி ஞர்பதச் சுரனிழிபு மாலை நனிவிருந்து அயர்மார் தேர்வரும் என்னும் உரைவா ராதே.

(குறுந்தொகை : 1.55: 3-7)

தோழி, தலைவிமாட்டுப் பேரன்பு பூண்டவள்; அறிவாற்றல் நிறைந்தவள்: வாழ்க்கையனுபவம் நிரம்ப வாய்க்கப்பெற்றவள். எனவே, தலைவியின் துன்பத்தினை அறிந்தவுடன் அவள் துன்பத்தினைத் துடைக்க முன்வந்தாள். எனவே, எடுத்த எடுப்பிலேயே தன் பேச்சைத் தொடங்கி அதன்வழி அவளுக்குத் தேறுதல் கூற முனைந்தாள். மயில்கள் மகிழ்ந்து ஆடும் காட்சியினைக் கண்டு நீ கார்காலம் வந்து விட்டது என்று வருந்துகின்றாய். மயில்கள் அறிவற்றவை: பருவமழை பெய்துவிட்டது என்று அறியாமையால் எண்ணிக் கொண்டு, அவ் அறியாமை வெளிப்பட அவை ஆடிக் கொண் டிருக்கின்றன. அவ்வாறே பிடவமலர்களும் மயங்கி மலர்ந் துள்ளன. ஆனாலும் தோழி, உனக்கு நான் சொல்வேன், உறுதியாக உரைப்பேன், இது கார்காலம் அன்று; உன் துயரம் தீர்வாயாக. சென்ற கார்ப்பருவத்து மழை தான் பெய்ய வேண்டிய முழுமழையினையும் பெய்துவிடாமல் சிறுநீரினை எஞ்சலாக வைத்திருந்தது. அந்தப் பழ்ைய நீரினை முற்றிலும் சொரிந்துவிட்ட பிறகுதானே, கடலிற் சென்று புதுநீரை முகந்து கொள்முதல் செய்து வரவேண்டும்? அவ்வாறு தன் பழைய இருப்பைத் தீர்த்து விடுவதற்காகப் பெய்த மழை யினைக் கார் என்று-புதுமழை என்று மயங்கக் கூடாது. இவ்வாறு நான் கூறினும், இடி இடிக்கின்றதே என்று என்னைக் கேட்பாய். மழை நம்மிடம் அன்பு காட்டாதது. ஆதலால், நம்மைத் துன்புறுத்த வேண்டும் என்னும் நோக்கில் இடி முழக்கத்தினைச் செய்கின்றது. அந்த முழக்கத்தைக் கேட்டு அறியாமையுடைய மயில்களும் ஆரவாரித்து ஆடுகின்றன. அவ்வளவுதான் உண்மை’ என்று பேசிள்ை தோழி.