பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யொய் மழை 43

மடவ வாழி மஞ்ஞை மாயினம்; கால மாரி பெய்தென அதனெதிர் ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன; காரன்று இகுளை! தீர்ககின் படரே ; கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர் புதுநீர் கொளிஇய உகுத்தரும் நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே

(குறுந்தொகை : 251) மயில்கள் அறியாமையால் கார்காலம் என்று கருதி ஆடு கின்றன என்று தோழி கூறித் தலைவியைத் தெருட்டிள்ை. தலைவியோ கொத்துக்கொத்தாகப் பூத்துக் குலுங்குகின்ற கொன்றை மரங்களைக் காட்டி, இவையும் அறிவில்லாமல் தாம் கார்கால வரவால் பூத்துக் குலுங்குகின்றனவா?’ என வினவிளுள். அதற்கும் உடனடியாகப் பதில் கூறுகிருள் தோழி: “பெரிய கொன்றை மரங்களும் அறிவில்லாதவையே. நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், தாம் திரும்பி வருவதற்குச் சொல்லிச் சென்ற பருவம் வருவதற்கு முன்னமே கிளைகளில் கொத்துக் கொத்தாகப் பூத்துவிட்டன: இடைக் காலத்தில் பொழிந்து விட்டுச் செல்லும் வம்பமாரியை-புதுமழையைப் பருவ மழை யாகிய கார் என்று கருதி மலர்ந்துவிட்டன. இதைக் கண்டு நீ வருந்தாதே’ என்றாள்.

மடவ மன்ற தடவு நிலைக் கொன்றை கல்பிறங் கத்தஞ் சென்றாேர் கூறிய பருவம் வாரா வளவை நெரிதரக் கொம்பு சேர் கொடியின ரூழ்த்த வம்ப மாரியைக் காரென மதித்தே

(குறுந்தொகை : 66)

தலைவி தன்னைச் சுற்றிலும் நோக்குகிருள். மயில்கள் மட்டும் தோகை விரித்து ஆடவில்லை; கொன்றைகள் மட்டும்