பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

பழந்தமிழ் இலக்கியங்களைக் கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி யாக நின்று சுவைத்து மகிழ்ந்து அதன் வெளியீடாய்ச் சில இலக்கியக் கட்டுரைகள் முகிழ்த்தன. அவ்வப் போது சில இதழ்களுக்கும் கட்டுரை எழுத வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. அம் முறையில் இந் நூலின் பல கட்டுரைகள் உருவாயின.

இலக்கிய இன்பத்திற்கு ஈடு இணை ஏது மில்லை. இதலைன்றாே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ‘கன்னல் தரும் தமிழே நீ ஒரு பூக்காடு; நானேர் தும்பி’ என்றார். இலக்கிய இன்பத்தில் திளைக்கும்பொழுது எல்லையில்லா இன்பத்தினை எய்த முடியும். அறிவியல் வேக மாக வளர்ந்துவரும் இந்நாளில் மனம் பண்படு வதற்கும் அமைதி பெறுவதற்கும் இலக்கியக் காட்சிகள் வழங்கும் ஈடற்ற இன்பம் மாசு மறுவற்ற இன்பமாகும். ‘யான் பெற்ற பேறு பெறுக இவ் வையகம்’ என்னும் பெருநோக்கில் யான் சுவைத்து மகிழ்ந்த இலக்கியக் காட்சி களை இனிதுறக் கட்டுரைகளாக்கி இலக்கியப் பசி மிகுந்த தமிழ்கூறு நல்லுலகின் முன் படைக்கின்றேன்.

தமிழகம் }

சென்னை-600 029 சி. பா.

25–4–1980