பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மலர் காட்டும் வாழ்க்கை

பூத்துக் குலுங்கவில்லை. இப்போது பிடவஞ் செடிகளும் காந்தள் செடிகளும் கூடப் பூத்துக் குலுங்குகின்றன. இவைகூட அறிவில்லாதவைதான?’ என்று ஐயத்தோடு வினவுகின்றாள்.

தோழியின் நிலை அறத்துன்பமான நிலை. ஆயினும் சதுரப்பாடு மிக்கவளாயிற்றே தோழி. தயக்கமின்றி மறு மொழி அவள் வாயினின்றும் வருகின்றது: “தலைவர் திரும்பி வருவதாகக் கூறித் தெரிவித்த பருவம் இதுதானே என்று கேட்கின்றாள். அறிவில்லாமல் உரிய காலத்தை மறந்து கடலுக்குச் சென்று நீரை முகந்து கொண்டுவந்த கரிய பெரிய மேகம் நீரைப் பொறுத்திருக்க ஆற்றாமல் கொட்டிவிட்ட மழை இது; இது கார்கால மழை என்று மயங்கி, ஆய்ந்து பாராமல் பிடவமும் கொன்றையும் காந்தளும் நன்கு மலர்ந்துவிட்டன. காரணம், அவைகளுக்கு ஆய்ந்து பார்க்கும் அறிவில்லை’ என்றாள்.

தாம்வரத் தெளித்த பருவம் காண்வர இதுவோ என்றிசின் மடந்தை மதியின்று மறந்துகடல் முகந்த கமஞ்சூல் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல் கார்என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில் பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின் மலர்ந்தன பலவே.

(நற்றிணை : 99: 4-10)

தோழி இவ்வாறு சொல்லியுங்கூடத் தலைவியின் உள்ளத் தில் தெளிவு பிறக்கவில்லை. பொன் காசுகளைப் போன்ற பூக்களை ஈன்ற கொன்றையைக் காணும்பொழுதும், குருந்த மலர்கள் மலர்ந்து அசைகின்றபொழுதும் கார்காலம் அன்று என்று நீ சொல்வாயேயானல், நான் காண்பனவெல்லாம் கனவுதான என்று கேட்கிறேன் என்கிருள் தலைவி.