பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய் மழை 45

காசின் அன்ன போதுஈன் கொன்றை குருந்தொடு அலம்வரும் பெருந்தண் காலையும் கார் அன்று என்றி யாயின் கனவோ மற்றிது வினவுவல் யானே.

(குறுந்தொகை : 148: 4-7)

தோழி இப்பொழுதும் தளரவில்லை. அவள் அறிவுத் திறம் வெல்கிறது. தலைவியை நோக்கி அவள் பேசு கிருள்.

‘நீ என் சொல்லை நம்பாவிட்டாலும் சரி; தலைவர் சொன்ன சொல்லை நீ நம்புகிறாய் அல்லவா? அவர் சொன்ன சொல்லினினும் தவறுவாரா? முல்லைக் கொடிகள் பூத்துக் குலுங்கக் காரணமாக இடைக்காலத்துப் புதுமழைவம்பமாரி-பெய்துவிட்டுப் புது மழையினைக் கொள்முதல் செய்யக் கடலுக்குப் போகின்றது என்று நான் சொன்னல், நீ நம்பமாட்டேன் என்கிறாய். இது வம்ப மழை அன்று, பருவ மழை பொழியும் கார் என்றே நீ கருதுவாயானல், கார்காலம் தொடங்குமுன் உறுதியாகத் திரும்பி வந்துவிடுவேன் என்று கூறிச் சென்ற தலைவர் தவருமல் வந்திருக்க மாட்டாரோ? அவர் இன்னும் வாராத காரணத்தாலேயே இஃது உண்மை யான கார்காலம் அன்று, வம்பமாரியே என்பது உனக்குத் தெரியவில்லையா?’ என்று நெருங்கிக் கூறினள்.

தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை முகைதலை திறந்த நாற்றம் புதன்மிசைப் பூமலி தளவமொடு தேங்கமழ்பு களுல

வம்பப் பெய்யுமால் மழையே வம்பன்று

கார்இது பருவம் ஆயின் வாரா ரோங்ம் காத லோரே.

(குறுந்தொகை : 382)