பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நல்ல குறுந்தொகை

“முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக் கும் புதுமையாய்ப் பெயர் விளங்கி ஒளிர நிற்பது நந்தம் மொழியாம் செந்தமிழ் மொழியாகும். வரலாற்றின் தொடக்க காலத்திலேயே வளமானதோர் இலக்கியப் பரப்பொன்று இலங்கி மிளிர்வது இம் மொழியிலேயே யாகும். தமிழின் பழம்பெரும் இலக்கியத்தினைச் சங்க இலக்கியம்’ என வழங்கு வர் சான்றாேர். சங்க இலக்கியம் ஒரு வாழைத் தோட்டம் எனலாம். வாழையடி வாழையெனக் காலங் காலமாகக் கன்றுகள் விட்டுத் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது அவ் இலக்கியம். காலத்தையும் வென்று நின்று வாழும் இலக்கியங் களாக அவை இன்று திகழ்கின்றன.

சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் என இருவகைப்

படும். பாட்டு என்பது பத்துப்பாட்டு: தொகை எனப்படுவது எட்டுத்தொகை. எட்டுத்தொகை நூல்களாவன:

நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்துங் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை

எனும் பழைய வெண்பா குறுந்தொகையினை நல்ல குறுந் தொகை எனக் குறிப்பிடுகின்றது.

உலகிற் காணலாகும் பொருள்களைக் காட்சிப் பொருள் என்றும், கருத்துப் பொருள் என்றும் இரு வகையாகப் பிரித்துக் கூறுவர். ஐம்புலன்களுக்கும் உட்பட்டவை காட்சிப் பொருள் கள்: மனனுணர்வால் அறியப்படுவன கருத்துப் பொருள்கள்.