பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மலர் காட்டும் வாழ்க்கை

புலன்களால் உணரப்படும் பொருளிலும் மனனுணர்வால் உணரப்படும் பொருள்களைச் சொற்களில் வடித்துக்காட்டி ஒர் உணர்வோவியம் தீட்டுவதில் சங்கப்புலவர்கள் வல்லவர் கள்.

குறுந்தொகை அகப்பொருள் பற்றிய நூலாகும். அகப் பொருளாவது யாது? ஒத்த அன்பும், வயதும், குடிப்பிறப்பும், கல்வியும், அழகும் சான்ற தலைமகனும் தலைமகளும் பிறர் கொடுப்பவும் அடுப்பவும் இன்றி, ஊழ்வழி வாழ்வில் ஒன்று கூட்டப்பெற்றுக் கூடி, அக் கூட்டத்திற்குப் பின்னர்த் தாங்கள் துய்த்த இன்பம் இன்னது இவ்வாறு இருந்தது என்று பிறர்க்குக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்து உணர்வாலேயே அனுபவிக்கப்படும் இன்பம் ஆதலின் ‘அகம்” எனப்பட்டது.

அகம் கூறும் அகத்திணைக்கெனச் சில வரையறைகள் உண்டு. இவ் வரையறைகள் புலவர்கள் தாம் கூற முற்படும் பொருள் சிறப்பதற்கெனத் தாமே அமைத்துக் கொண் டவைகளாகும். இதனைத் தொல்லாசிரியராம் தொல்காப் பியர்ை.

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்

(தொல். அகத். 56)

என்பர். ‘நாடக வழக்காவது சுவைபட வருவெனவெல்லாம் ஒரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல்’ என்பர் உரையாசிரியர் இளம்பூரணர். உலகியல் வழக்காவது

உலகத்தார் ஒழுகலாற்றாேடு ஒத்து வருவது ஆகும்.

குறுந்தொகை நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையுங் கொண்ட அகவற் பாக்களால் இயன்றது: முதல், கரு, உரிப் பொருள்கள் சிறந்தது. இந் நூலின் அருமை குறித்துத் தமிழ்த்தாத்தா டாக்டர் உ. வே. சாமி